இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவது இயலாத நிலையில் உள்ளது.

இன்று முதல் அமர்வில் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவது இயலாத நிலையில் உள்ளது. ஏனென்றால் தலைமை நீதிபதி தலைமை செயலகத்தில் மதியம் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள செல்வதாலும், மாலையில் நீதி மன்ற வளாகத்தில் நடைபெறும் மற்றொரு பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாலும் முதல்அமர்வு செயல்படாது என தெரிகிறது. ஒரு சில காரணங்களால் வழக்கு வருகிற செவ்வாய் கிழமைதான் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்ட தோழர்கள் கலியமூர்த்தி மற்றும் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு நன்றி.பல்வேறு காரணங்களால் வழக்கு தள்ளி போவது ஆசிரியர்களை சோர்வடைய செய்துள்ளது.

THANKS -Mr .Muthupandian Tnptf