அண்ணாமலை பல்கலை.,யில் பி.எட் நுழைவு தேர்வுக்கு அழைப்புஅண்ணாமலை பல்கலை.,யில் தபால் வழி பி.எட் படிப்புக்கான நுழைவுதேர்வுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் நடப்பு ஆண்டில் தபால் வழி பி.எட் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்சி,எம்.காம், எம்.பி.ஏ, மருத்துவ படிப்பு, பட்டய படிப்பு, முதுகலை பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கையும் தற்போது நடந்து வருகிறது.இந்த படிப்புகள் சம்பந்தமான விபரங்களை நெல்லை ஜங்ஷன் கைலாசபுரத்தில் செயல்படும் அண்ணாமலை பல்கலை., நெல்லை அலுவலகத்தை (0462 - 2331288) என்ற எண்ணில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.