10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பெயரில் பிழை இருப்பின், திருத்தம் செய்து கொள்ள, ஆக., 26 முதல், செப்., 7 வரை, வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள்
பெயர் பட்டியல் இறுதி செய்யும் பணி, ஆக., 26 முதல், நடக்க உள்ளது. இதன்படி, மதிப்பெண் சான்றிதழில், பெயர், இன்ஷியல், பிறந்த தேதி உள்ளிட்டவை பதிவு செய்யப்படும்.

இது தொடர்பாக, தேர்வுத் துறையின் சுற்றறிக்கை: சில பெற்றோர், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது, பெயர், இன்ஷியல், பிறந்த தேதி போன்ற விவரங்களை தவறாக கொடுக்கின்றனர். இதனால், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்படுகிறது. உயர் கல்விக்கு செல்லும் போது சிக்கல் ஏற்பட்டு, அதை சரி செய்ய தாமதம் ஆகிறது. இதைத் தவிர்க்க, மாணவரிடம், உறுதி மொழி சான்றிதழ் படிவம் அளிக்கப்படும். அதில், பெயர், இன்ஷியல் உள்ளிட்ட சரியான விவரங்களை எழுத வேண்டும்; படிவத்துடன், பிறப்பு, ஜாதிச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். இப்படிவத்தை ஆக., 26 முதல், செப்., 7க்குள், தலைமை ஆசிரியரிடம் பெற்று, பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.