• 6:38 PM
  • www.tntam.in

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவியரின் பேரணி
நடந்தது.
"படிக்கும் வயதில் உள்ள மாணவர்களுக்கு கட்டாயம் அடிப்படை கல்வி கிடைக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி தெற்கு எஸ்.எஸ்.ஏ., சார்பில் கல்வி உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார வள மையத்தில் இருந்து துவங்கிய பேரணியை, நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், தெற்கு ஒன்றிய தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர். உதவி துவக்க கல்வி அலுவலர்கள் பூம்பாவை, கண்ணபிரான், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பி.எஸ்.என்.எல்., அலுவலக ரோடு, காந்திசிலை, கோவை ரோடு, தலைமை தபால் நிலைய ரோடு வழியாக மீண்டும் எஸ்.எஸ்.ஏ., அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.

பேரணியில், "ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும். பள்ளியில், மாணவர்களை சேர்க்க பிறப்பு சான்றிதழ், பள்ளி விடுப்பு சான்றிதழ் ஆகியவற்றை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. நன்கொடை பெறக்கூடாது. மாணவர்களை சேர்க்க, பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது. மாணவர்களிடம், ஜாதி,மத பாகுபாட்டை ஏற்படுத்தக்கூடாது,' என்பது உள்ளிட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

ஆசிரிய பயிற்றுனர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதல்கட்டமாக, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், திருவள்ளுவர் திடல் ஆகிய இடங்களில், பாட்டு, நாடகம் நடந்தது. தொடர்ந்து இன்று, சூளேஸ்வரன்பட்டி, கோட்டாம்பட்டி ஆகிய இடங்களிலும், நாளை (17ம் தேதி) மரப்பேட்டை, குமரன்நகர் பகுதியிலும், 18ம் தேதி சமத்தூர், ஜமீன்ஊத்துக்குளி பகுதியிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இத்தகவலை, எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive