உத்தரப் பிரதேசத்திலும் இலவச லேப்டாப்!


தமிழக அரசின், இலவச லேப்டாப் திட்டத்தை போல உத்திரபிரதேச அரசும், பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்குகிறது.இதன்படி 15 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கு எச்.பி.,கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு லேப்டாப் விலை 19,058 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2 ஆயிரத்து 858 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.