குரூப்-4: 2,899 இடங்களை நிரப்ப தேர்வாணையம் அறிவிப்பு.


குரூப்-4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை துவங்கி, மார்ச், 4ம் தேதி வரை நடைபெறும்; இதில், 2,899 இடங்கள் நிரப்பப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கு, ஏற்கனவே, 3,485 பேர், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர். மீதமுள்ள,
2,899 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை துவங்கி, மார்ச் 1, 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும்.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் விவரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட, இரண்டு செட் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். 10ம் வகுப்பை, தமிழ் வழியில் படித்ததாக உரிமை கோரும் தேர்வர்கள், சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம், சான்றிதழ் பெற்று வர வேண்டும். இவ்வாறு செயலர் தெரிவித்து உள்ளார்.