பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவு.


பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்தியஅளவில் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில்
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்பட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அரசு உத்தரவிட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதால், ஊழியர்களின் வருகையை அதிகாரிகள் தொகுத்து துறை வாரியாக வைத்து கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசுக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக இயக்குநரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.