குரூப்-2 தேர்வு: 22ம் தேதி முதல் நேர்காணல்


குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும்; இதற்கான நேர்காணல், 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நடக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்துள்ளார்.
சமூக வளைதளம் ஒன்றில், அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே, எந்த நேரமும், குரூப்-2 தேர்வு முடிவு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட, 19 வகையான பதவிகளில் உள்ள, 3,631 காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஆக., 12ல், போட்டித் தேர்வு நடந்தது.இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே,"லீக்&' ஆன தகவல், தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், தேர்வு நடந்த நாளன்று தெரிய வந்தது. இதையடுத்து, தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்து, நவ., 4ல், மறு தேர்வு நடத்தியது.

வேளாண் அதிகாரிகள், 460 பேர் தேர்வுப் பட்டியல், நேற்றிரவு, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியலை, தேர்வாணையம் வெளியிட்டது.

இவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை, 20ம் தேதி வழங்கப்படும் என, நடராஜ் அறிவித்துள்ளார்.