• 1:21 AM
  • www.tntam.in
மாவட்ட பொதுக்குழு  கூட்டம்:

இடம்:  கவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி

இடைநிலை / சிறப்பாசிரியர்கள் பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ,பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் சார்பில்

மாவட்ட பொதுக்குழு  கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்  கவேரிப்பட்டணம் அரசு
ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் வரும் ஞாயிறு (17.02.2013) அன்று காலை
10.00 மணி அளவில் நடை பெற உள்ளது  . இந்த கூட்டத்திற்கு மாநில பொது
செயலாளர் திரு ஆ .வ .அண்ணாமலை மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள்
கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் . அந்த கூட்டத்தில் புதிய மாவட்ட
பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
அனைத்து இடைநிலை / சிறப்பாசிரியர்கள் பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களும், தற்போது பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள
இடைநிலை / சிறப்பாசிரியர்கள் அனைவரும்  இக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள
வேண்டுமாய் கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நமது முக்கிய கோரிக்கையான  அடுத்த பதவி உயர்வான உயர் நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர் பதவி பணிக்காலதையும் கணக்கில்
எடுத்துக்கொள்ள வேண்டுதல் பற்றி விவாதிக்க வேண்டி உள்ளதால் கிருஷ்ணகிரி
மாவட்டத்தின் அனைத்து இடைநிலை / சிறப்பாசிரியர்கள் பதவியில் இருந்து பதவி
உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களும், தற்போது பதவி உயர்வு முன்னுரிமை
பட்டியலில் உள்ள இடைநிலை / சிறப்பாசிரியர்கள் அனைவரும்  இக் கூட்டத்தில்
தவறாது கலந்துக்கொள்ள வேண்டுமாய் கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி .



இப்படிக்கு


கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் .

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive