பள்ளிக்கல்வி துறையில் 117 தட்டச்சர் பணி நியமன கலந்தாய்வு, நா ளை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.


குரூப்-4 தேர்வு வழியாக, பள்ளிக்கல்வி துறைக்கு, 117 தட்டச்சர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், பள்ளிக்கல்வி துறையிடம், தேர்வாணையம் வழங்கியதை அடுத்து, அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, வரும், 25ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.அந்தந்த மாவட்ட தேர்வர்கள், நாளை காலை 9:00 மணிக்கு, சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். காலையில், மாவட்டத்திற்குள்
உள்ள காலி பணியிடங்களுக்கும், பிற்பகலில், வெளி மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கும்.