• 12:52 AM
  • www.tntam.in

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வில், சென்னையில் உள்ள சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 48 பேர் துணை கலெக்டர்களாகவும், 23 பேர் போலீஸ் துணை கண்காணிப்பாளர்களாகவும் தேர்வு பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில், மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோர் நடத்தும் மனித நேய மையம் பல்வேறு அரசு பணிகள் தேர்வுக்காக இலவச பயிற்சி அளித்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை–கலெக்டர், துணைபோலீஸ் கண்காணிப்பாளர் போன்ற குரூப்–1 பணிகளுக்கான தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியானதில் 131 காலிப்பணியிடங்களுக்கு மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 112 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு மையத்தின் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டதுடன், இலவச தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட்டிருந்தது.





மாநில அளவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுராந்தகி முதல் இடத்திலும், ஈரோட்டைச் சேர்ந்த ஜி.சரவணமூர்த்தி இரண்டாவது இடத்திலும் வெற்றி பெற்று துணை கலெக்டர் பதவிக்கு தேர்வாகி உள்ளனர். 112 பேரில் 48 பேர் துணைகலெக்டர் பதவிக்கும், 23 பேர் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) பதவிக்கும், 6 பேர் மாவட்ட பதிவாளர் பதவிக்கும், 23 பேர் உதவி ஆணையர் (வணிகவரி) பதவிக்கும், 8 பேர் துணை இயக்குனர் (பஞ்சாயத்து) பதவிக்கும், ஒருவர் மாவட்ட தீயணைப்பு துறை பதவிக்கும் தேர்வு பெற்றுள்ளனர். 3 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.வெற்றி பெற்றவர்களுக்கு மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார். வெற்றி பெற்றவர்கள் தங்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

முதல் இடத்தில் தேறி துணை கலெக்டர் பணி ஒதுக்கீடு பெற்றுள்ள எஸ்.மதுராந்தகி கூறியதாவது:–

என்னுடைய வெற்றியை மனிதநேய மையத்திற்கும், என்னுடைய பெற்றோருக்கும் சமர்ப்பிக்கிறேன். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்த எனக்கு, இந்த துறையில் நுழைவதற்கான முழு ஒத்துழைப்பை பயிற்சி மையம் அளித்தது. அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த என்னுடைய தந்தை சதாசிவம் மற்றும் மாநில போட்டித் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜேஸ்வரன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சிறிய கிராமத்திலிருந்து வந்துள்ளதால், என்னுடைய வருங்கால பணி கிராம முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு மதுராந்தகி கூறினார்.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive