தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளின் வருடாந்திர நடவடிக்கைகள் சார்ந்த அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கூட்டத்தில் தெரிவித்த
அறிவுரைப்படி,









*ஒவ்வொரு பள்ளியிலும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்ட பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் அவர்களின் கல்வி செயல்பாடுகள் பற்றி பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சந்திக்கும்/ கலந்துரையாடும் வகையிலான கூட்டத்தை ஏற்பாடு செய்து குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கும் குறைவில்லாத வகையில் நடத்திடல் வேண்டும்.*

*2018-19 ஆம் கல்வியாண்டில் EMIS இணையதளத்தில் அனைத்து மாணவர் சார்ந்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்யும் பணியை 31.07.2018 ம் தேதிக்குள் முடித்திடல் வேண்டும்.*

*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிகணினி (Laptop) மற்றும் கணிப்பொறிகளை (Computer) கல்வி சார்ந்த வகுப்பறைப் பயன்பாட்டிற்கு அவசியம் பயன்படுத்திடல் வேண்டும்.*

*ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி ஆண்டுவிழாவினை 2018 ம் ஆண்டிற்குள் வெகு விமர்சையாக நடத்திட தேவையான உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.*


*எனவே மேற்காண் குறிப்பிடப்பட்ட விவரங்கள் சார்ந்த கல்வி மாவட்டம் வாரியாக மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இப்பணிகளில் எவ்வித குறைகளுக்கும் இடமின்றி காலதாமதம் ஏற்படாமல் முடிக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.






Related