பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது.
அரசுத்தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும். ஜூன் 4ம் தேதி பிற்பகல்
முதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே செல்லும்.
பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது