தமிழக ஆளுநராக இன்று பதவியேற்கிறார் பன்வாரிலால்!


Banwarilal prohit taking charge as new governor of Tamilnadu today

சென்னை: தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்கிறார். தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 30 ஆம் தேதி வெளியிட்டார்.


இந்நிலையில் புதிய ஆளுநரான பன்வாரிலால் இன்று பதவியேற்கவுள்ளார். இதற்காக நேற்று சென்னை வந்த
அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் .பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். மேலும் தமிழக காவல்துறை சார்பில் பன்வாரிலால் புரோகித்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. புதிய ஆளுநர் வருகைக்காக ஆளுநர் மாளிகையில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய ஆளுநராக பன்வாரிலால் இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

Related