TAM-NEWS

JACTTO GEO போராட்டம் - புள்ளியியல் துறையினருக்கான ஈடுசெய்யும் பணி நாட்கள் - முதன்மைச் செயலர் வெளியிட்டார்

JACTO-GEO-வின் வேலைநிறுத்த காலமான  07.09.17 முதல் வேலை
நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட,

*பொருள் இயல் & புள்ளி இயல் துறை அரசு ஊழியர்கள்* தங்களின் போராட்ட காலத்தை ஈடுசெய்து கொள்ள ஏதுவாக,

*அக்டோபர் 7, 14 & 28*

*நவம்பர் 4, 11, 18 & 25*

*டிசம்பர் 2 & 9*

ஆகிய 9 சனிக்கிழமைகளை வேலை நாட்களாக அனுமதித்து உத்தரவிட சார்ந்த *மண்டல & மாவட்ட இயக்குநர்*களுக்கு,

*பொருள் இயல் & புள்ளி இயல் துறையின் முதன்மைச் செயலர் முனைவர்.வெ.இறையன்பு ..* அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


வேலைநிறுத்த காலத்திற்கு ஊழியர்கள் ஈடுசெய்ய உள்ளதால், முன்னதாக ஊதியப்பிடித்தம் செய்திருப்பின் துணைப்பட்டியல் தயாரித்து* அரசு ஊழியர்களுக்கு நிலுவை *ஊதியமாக வழங்கிடவும் கூறியுள்ளார்.

Related