TAM-NEWS

லஞ்சம் கேட்பவர்களை செருப்பால் அடியுங்கள்: சந்திரசேகர ராவ்

ஐதராபாத்: சமீபத்தில் நடந்த தெலுங்கானாவில் சிங்கரனி கொலிரியஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) அமைப்பின் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தெலுங்கானா போகு கானி கர்மிகா சங்கம் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விழாவில் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசினார்.
சந்திரசேகர ராவ், லஞ்சம்
அப்போது அவர், எஸ்சிசிஎல்.,ல் லஞ்சத்தை அனுமதிக்காதீர்கள். யாரும் லஞ்சம் தராதீர்கள். ஒருவேளை எந்த அதிகாரியாவது, விடுமுறை, மருத்துவ பலன், வீடு கட்டுவதற்கான கடன் பெறுவது உள்ளிட்ட உங்களின் தொழிலாளர் பயன்களை பெற லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பால் அடியுங்கள். லஞ்சம் கேட்பவர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள்.
தகுதி உடைய தொழிலாளர்கள் அனைவருக்கும் வட்டியில்லாத வீட்டு கடன் வழங்கப்படும். வாக்குதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். எஸ்சிசிஎல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஐஐடி.,க்கள் மற்றும் ஐஐஎம்.,களில் படிக்க சீட் கிடைத்தால் அதற்கான கல்வி செலவை மாநில அரசே ஏற்கும்.

உங்களின் பிரச்னைகளை நேரடியாக கண்டிட விரைவில் சிங்கரனி யாத்திரை மேற்கொள்ள உள்ளேன். நீங்கள் மக்களுக்கு எப்படி மருத்துவ சேவை வழங்குகிறீர்கள் என்பதை கண்டறிய சிங்கரனி மருத்துவனையில் நான் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

Related