அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய பயிற்சியாளர் நியமனம்

ராமநாதபுரம்;அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், புதிய பயிற்சியாளர்கள்மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், உள்ளடக்கிய
கல்வித்திட்டம், சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிக அடிப்படையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் அடிப்படையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் இயன்முறை பயிற்சியாளர்கள், தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப்பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இயன்முறை பயிற்சியாளருக்கு குறைந்தபட்சம் இளங்கலை பிசியோதெரபி படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தொழில்சார் பயிற்சியாளர் பதவிக்கு இளங்கலை தொழில் சார் பயிற்சி படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.பேச்சு பயிற்சியாளர் பணிக்கு இளங்கலை கேட்பு மற்றும் பேச்சுத்திறன் பயிற்சி அல்லது பி.எஸ்.சி., ஸ்பீச் பெத்தாலஜி படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி, அனுபவ சான்று நகல்களுடன் விண்ணப்பங்களை அக்.,6க்குள் ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி: முதன்மைக்கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஓம்சக்தி நகர், மாடியில், பட்டணம்காத்தான் வி..., அலுவலகம் பின்புறம், ஓம்சக்திநகர், ராமநாதபுரம்.

Image may contain: text

Related