அக்., 3க்கு பின் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி அக்., 31 வரை நடக்கிறது.

தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்,
ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று சரிபார்த்து கொள்ளலாம்.

அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் அக்., 8, 22ம் தேதிகளில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் தங்களை பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய தங்கள்பகுதி ஓட்டுச்சாவடிகளில் மனு அளிக்கலாம்.
இப்படி பெறப்படும் மனுக்கள் டிச., 10லிருந்து பரிசீலிக்கப்படும். பிறகு வாக்காளர் துணைப்பட்டியல் அச்சிடும் பணி டிச., 11 முதல் 2018 ஜன., 3 வரை நடக்கும். பிறகு ஜன., 5ல் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

எனவே இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என்றனர்

Related