TAM-NEWS

TET - பள்ளிக்கல்வி துறை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்களுக்கு தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிட்டும் கலந்தாய்வுக்கு அழைக்காதது ஏன்? - அதிகாரிகள் விளக்கம்.

ள்ளி கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிட்டும் கலந்தாய்வுக்கு அழைக்காதது ஏன்?
அதிகாரிகளின் விளக்கம்:-

ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி:-. நாங்கள் இது தொடர்பாக இறுதி பட்டியல் தயாரித்து அனுப்பி விட்டோம். பணி நியமனம் செய்வது அந்தந்த துறையை பொறுத்தது.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்:- பள்ளி கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 167 (இந்த எண்ணிக்கை அச்சுபிழையால் தவறாக பதிவாகி இருக்கலாம்) பேர் கொண்ட பட்டியல் உள்ளது. சிறிய பிரச்சினை காரணமாக கலந்தாய்வுக்கு அவர்களை அழைப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது

அந்த பிரச்சனையை தெளிவுபடுத்துவது பற்றி அரசிடம் பேசி வருகிறோம். இந்த வாரத்திலோ அல்லது அதற்கு அடுத்த வாரத்திலோ கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளது.


ஆதாரம்: தினத்தந்தி 18-9-2017


Related