புதுப்பிக்கப்பட்ட EMIS தளத்தில் செய்ய வேண்டிய முதற்கட்டப் பணிகள் :

கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் வலைதளத்தில் பள்ளி பற்றிய
தரவுகளைப் பதிவேற்றும் பணி முழுக்க முழுக்க அலுவலகப்பூர்வமாக நடந்தேற வேண்டுமே அன்றி,

தனியார் இணையதள மையங்களில் இப்பணியை மேற்கொள்ளக் கூடாது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் / வட்டார வளமைய கணினி வழியே இப்பணியினை மேற்கொள்ளலாம்.

கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் https://emis.tnschools.gov.in/ என்ற இணைய முகவரி வழியே நுழையலாம்.

இதற்கான புதிய கடவுச்சொல்லை (Password) அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

புதுப்பிக்கப்பட்டுள்ள EMIS தளத்தில் முதன்முதலாக உள் நுழைகையில் பள்ளிக்கான மின்னஞ்சல் & செல்லிடபேசி எண்ணை கொடுத்தால் மட்டுமே முழுமையாகத் தளத்தினுள் நுழைய இயலும்.

அதன்பின்னர், கடவுச்சொல்லை மாற்றிக் கொள்வதற்கான பக்கம் RESET PASSWORD திறக்கப்படும். இதில் நமது வசதிக்கேற்ற புதிய கடவுச்சொல்லைக் கொடுத்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

தங்கள் பள்ளியின் அடிப்படைத் தரவுகளை புதுப்பிக்க விரும்பினால் "School" என்ற விசையை அழுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.

புதிய மாணவர்களைப் பதிவேற்ற "Student -> Creat Student" என்பதைத் தெரிவு செய்து பதிவேற்றிக் கொள்ளலாம்.

தற்போதைக்கு 1-ம் வகுப்பு மாணவர்களை மட்டுமே புதிதாகச் சேர்க்க இயலும்.

மாணவர் சேர்க்கையில் பின்வரும் தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும்.

' * ' குறியிடப்பட்ட தகவல்களைக் கட்டாயம் பூர்த்தி செய்தாக வேண்டும்.


Personal info

Student Name *
Student Name in tamil
Aadhar number
Date of Birth *
Gender *
Religion *
Community *
Subcaste *
Mother tongue *
Disadvantage Group Name
```[Orphan / HIV Affected / Transgender / Child of a Scavenger / Socially disadvantaged group / Person with disability]```
Disability Group Name
```[Visual Impairment (Blindness) / Visual Impairment (Low-vision) / Hearing Impairment / Speech Impairment/ Locomotor Impairment /Handicap / Mental Retardation / Learning disability / Dyslexia / Cerebral Palsy / Autism / Multiple disability / Muscular dystrophy / Down syndrome]```


Family Details

Mother Name
Father Name
Gaurdian Name
Father's Occupation
```[Govt / Private / Self-employed / Daily wages / Un-employed / N/A]```
Mother's Occupation
```[Govt / Private / Self-employed / Daily wages / Un-employed / N/A]```
Parents Annual income


Communication Details

Mobile number *
Email id
Door no. / Building Name *
Street Name / Area name *
City name / Village name *
District *
Pincode *


Academic info

Class Studying *
Section *
Previous class studied *
Admission Number *
Date of Joining *
Medium of instruction *


Student -> Student List என்பதைத் தெரிவு செய்து வகுப்புவாரியான மாணவர் விபரங்களைத் தரவிறக்கமோ, வன்னநகலோ எடுத்துக்கொள்ளலாம்.

Related