அரசு பணியாளர் அனைவரும் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை அணிய வேண்டும்.-அரசு செயலாளர் உத்தரவு


தமிழக அரசு தனது கடித எண்:-28939/2/2017-1 நாள்.05.9.2017 ன் படி தமிழக அரசு ஊழியர்கள் அடையாள அட்டையுடன் பணியாற்ற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்த ஒரு பணியாளரும் தனித்தனியாக தனது சொந்த செலவில் அடையாள அட்டை எடுக்க தேவையில்லை.  GOMS No.363 P& A R (A) Depat.dt.01.12.2004 ன் படி அடையாள அட்டைகளை முதல் தடவை அரசு செலவில் ". ஏனைய சில்லரை செலவினம் "என்ற தலைப்பில் அலுவலக செலவில்  அரசு விதிகளை கடைப்பிடித்து அட்டையை  அனைவரும் பெறலாம். கடன் பட்டியலை கருவூலம் மூலம் காசாக்கிடலாம். மேலும் இந்த அடையாள அட்டை நீளம் 10 செமீ அகலம் 7 செமீ அளவில் இருக்க வேண்டும்.

Related