வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிறுத்திவைக்கவும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது.

No automatic alt text available.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் 

செய்யக்கூடாது மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக் கால தடை விதித்தனர். தடையை மீறி போராட்டம் தொடர்ந்ததால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.


மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கடந்த 15-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன் பேரில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ் ஆஜரானார்கள். அவர்களிடம் போராட் டத்தை வாபஸ் பெற்று உடனடியாக வேலைக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்காக தமிழக அரசின் தலைமைச்
செயலாளர் 21-ந்தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டனர். அதன்படி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்.

12.30 மணியளவில் வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ஜாக்டோ-ஜியோ சார்பில் மூத்த வக்கீல் பிரசாத் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்த சரியான கால அளவு குறித்து ஆலோசனை நடத்தி தெரிவிக்குமாறு அரசு தரப்பிடம் கூறினர்.

வேலை நிறுத்ததில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிறுத்திவைக்கவும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது. வேலை நிறுத்த நாட்களை வேலை செய்து ஈடாக்கி கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்த நாட்களை சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
Image may contain: 1 person, smiling
நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் 7ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த எத்தனை நாட்களாகும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அக். 13ஆம் தேதிக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Related