கிராம மாணவர்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் - ஆசிரியை சபரிமாலா: வீடியோ

விழுப்புரம்: நீட் தேர்வுக்கு எதிராகப் போராட அனுமதிக்காத அரசுப் பள்ளி வேலை வேண்டாம் என்று முடிவெடுத்து ராஜினாமா செய்தேன் என ஆசிரியை சபரிமாலா கூறியுள்ளார். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த சபரிமாலா தன் வேலை ராஜினாமா செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப் பள்ளி ஆசியராக இருந்து நான் நீட் தேர்வுக்கு எதிராக போராட சட்டத்தில் இடமில்லை என்றார்கள். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா மறைவுக்குப் பிறகு தன்னெழுச்சியாக உந்தப்பட்டு போராட்டத்தில் இறங்கினேன்.

ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போது நான் ஆசிரியை வேலையை ராஜினாமா செய்தேன். என் கோரிக்கை ஒரே தேசம், ஒரே கல்வி, ஒரே தேர்வு என்பதுதான்.

ஒரே மாதிரியான கல்வியை கொடுக்காத போது, ஒரே மாதிரியான தேர்வை நடத்துவது நியாயம் அல்ல. கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என் மிச்ச வாழ்க்கையாக இருக்கும் என கூறினார்

Related