பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட உத்தரவு:
* பள்ளிகளில் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுற்றித் தண்ணீர் தேங்காமல்
பராமரிக்க வேண்டும். தண்ணீர் ்தேங்கி இருந்தால் அதை அகற்ற வேண்டும்.
* பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட வசதியாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பள்ளி கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் உள்ள பொருட்கள் உட்பட தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.

* பள்ளி மாணவர்கள் சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.

Related