நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ ஆயத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட முக்கிய தகவல்கள்

🔴 *இன்று  முதல் நடைபெறும் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் எவ்வித அச்சமும் இன்றி கலந்து
கொள்ள வேண்டும்.*

🔴 *அனைத்து பள்ளிகளையும் மூடுவதன் மூலம் போராட்டம் பலப்படும்*

🔴 *உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஏதேனும் விளக்க கடிதம் தர முற்பட்டால் போராட்டத்தில் இருப்பதால் அதனை வாங்க தேவையில்லை*

🔴 *தேவை ஏற்படின் ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்கள் அந்த விளக்க கடிதத்தை பெற்று கொண்டு மாநில அமைப்பின் அறிவுறுத்தல் படி பதில் தரலாம்*

🔴 *எனவே ஆசிரியர்கள் தற்பொழுது வழங்குவதாக சொல்லப்படும் விளக்க கடிதத்திற்கு முக்கியதுவம் அளிக்க வேண்டாம்*

🔴 *ஊதிய பிடித்தம் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தையின் போது பேசப்படும் எனவே அது குறித்தும் அச்சப்பட தேவையில்லை ஒன்றுபட்டு அனைவரும் இணையும் பட்சத்தில் இவையெல்லாம் சாதாரணமே*

🔴 *14 ம் தேதி நீதிமன்றத்தில் பதிலளிக்க போதிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது அதனால் சட்ட பாதுகாப்போடு நாம் போராட இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்*

🔴 *13 ம் தேதி நடைபெறும் உள்ளிருப்பு போராட்டம் அரசை அழைத்து பேச வைக்கும் ...அது வரை அனைவரும் போராட்டக்களத்தை உயிரோட்டமாக வைத்திருந்து கோரிக்கைகளை வெல்ல உறுதியேற்க வேண்டும்*

*அன்புடன்
*உயர்மட்ட குழு*

*ஜாக்டோ-ஜியோ*

Related