அரசு ஊழியா்கள் பணிக்கு திரும்ப தலைமை செயலாளா் வேண்டுகோள்

ஜேக்டோ ஜியோ அமைப்பினா் போராட்டம் நடத்த உயா்நீதிமன்ற
மதுரைக்கிளை தடை விதித்துள்ள நிலையில் ஆசிாியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளா் கிாிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ, ஊதிய விகிதம் திருத்தியமைப்பது, இடைக்கால நிவாரணம் வழங்குவது, முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற 11 கோரிக்கைகள் குறித்து அரசுடன் பேச்சு நடத்தியது.

இதில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து இன்று முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடா்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைகிளை வேலைநிறுத்தத்தை அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது, வேலைநிறுத்தத்தால் நிர்வாகம், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என தொிவித்தது.


இதனைத் தொடா்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கிாிஜா வைத்தியநாதன் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் நீதிமன்ற உத்தரவுப்படி பணியாளா்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தொிவித்துள்ளாா்.

Related