தமிழகத்தில் நவோதயா பள்ளி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை : தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி குமரி மகாசபைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ்
என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சசிகதரன், சுவாமிநாதன் அடங்கிய பெஞ்ச், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர வேண்டும். 8 வாரங்களுக்கும் தடையில்லாத சான்றிதழ் வழங்க வேண்டும். நவோதயா பள்ளிகள் அமைக்க தேவையான உள்கட்டமைப்புக்களை அமைத்து தர வேண்டும். பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Related