வேலையைவிட தேசமே முக்கியம்' - அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா உருக்கம்

"என் வேலையைவிட எனக்கு தேசம் முக்கியம் என்பதால் எனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்கிறேன்" என்று ஆசிரியை சபரிமாலா, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியிடம் உருக்கமான கடிதம்
அளித்துள்ளார்.
Image may contain: 1 person
நீட் தேர்வால் தனது டாக்டர் கனவு பறிபோனதால் வேதனையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதைத் தொடர்ந்துநீட்தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலா, அதே பள்ளியில் படிக்கும் தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ’நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. "அரசு ஊழியராக இருந்துகொண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று துறைரீதியாக அவரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியை சபரிமாலா, தனது ஆசிரியர் பணியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இந்தக் கடிதத்தை விழுப்புரம் மாவட்டம் தொடக்கப்பள்ளி அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில், "நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஆசிரியராக தமிழகக் கல்வித்துறையில் பணியாற்றிவருகிறேன். மாணவர்களுக்காக எனது வாழ்வையே அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கியுள்ளேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் என்பதற்காகவே எனது மகனை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கிறேன். இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணத்தை ஓர் ஆசிரியராகக் கல்வி எழுச்சிகொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன். ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும் என்ற வேதனையில் எனது வெளிப்பாட்டைத் தன்னெழுச்சியை 6.9.17 அன்று காலை 9.30 மணிக்கு எனது பள்ளிக்கு வெளியே உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அனுமதியில்லாமல் தொடரக் கூடாது என்றதும் 1.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி காவல்துறையிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் அனுமதி வழங்கவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஆசிரியர் கல்வி பிரச்னைக்காகக் குரல் எழுப்பியது குற்றம் என்று சொல்கிறது சட்டம். சம்பளத்துக்காக ஆசிரியர்கள் போராடும்போது சமத்துவம் கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. என் வேலையைவிட எனக்கு தேசம் முக்கியம் என்பதால் என் ஆசிரியர் பணியை 7.9.2017 முதல் வருத்தத்தோடு ராஜினாமா செய்கிறேன்" என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

Related