அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை... அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை என்பது குறித்து பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில்
தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஊழியர்களின் தங்களின் ஓய்வூதியத்திற்காகவே போராடுகின்றனர். இது நியாயமான கோரிக்கை தான் என்றார்.
அரசு ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது, ஆனால் போராடும் விதமே தவறானது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஏன் அரசு தரவில்லை. 2003க்குப் பிறகு அரசு ஊழியர்கள் எவ்வளவு பேர் ஓய்வுபெற்றனர் என்றுஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு பங்களிப்பு தொகையை ஏன் செலுத்தவில்லை என்றும் நீதிபதி கேட்டார். மேலும் இது குறித்து அரசு திங்கட்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related