போக்குவரத்து ஊழியர்கள் நாளை (செப்.,9) போராட்ட அறிவிப்பு

சென்னை: போக்கு வரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது
தொடர்பாக நாளை (செப்.,9)நோட்டீஸ் அளிக்க உள்ளனர்.


இது குறித்து போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் 

தெரிவித்திருப்பதாவது:ஓய்வூதிய நிலுவைத்தொகை மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து 15 நாட்களுக்குள் வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் .மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது செப்.,மாத இறுதிக்குள் ரூ.1,250 கோடி நிலுவை தொகை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் அளித்த வாக்குறுதியின் படி நிலுவை தொகை வழங்காததால் திட்டமிட்ட படி நாளை (செப்.,9 போராட்டம் நடத்த நோட்டீஸ் அளிக்கப்படும் என கூறினர்.

Related