புத்திசாலி மாணவர்களுக்கு மாதம் ரூ.75,000 ஊக்கத்தொகை

உயர் கல்வி மையங்களில் படிக்கும், புத்திக் கூர்மையான மாணவர்களுக்கு, மாதம், 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஒப்புதலை,
மத்திய அமைச்சரவை, விரைவில் வழங்க உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.  டில்லியில் நேற்று, ..டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: அறிவுக்கூர்மையான மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால், நம் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், நவீனத்துவத்தை ஊக்குவிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


இதன் ஒரு கட்டமாக, உயர் கல்வி மையங்களில் பயின்று வரும், புத்திக்கூர்மை உள்ள மாணவர்களுக்கு, மாதந்தோறும், 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தொகை, ..டி., போன்ற, உயர் கல்வி மையங்களில் படிக்கும், 1,000 மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், பிரதமர் கல்வி ஊக்கத் தொகை திட்டம் துவக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்

Related