5-வது ஆசிய உள்ளரங்க விளையாட்டு போட்டி: 3000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம்


Asian Indoor: TN Lakshmanan wins gold in 3000m

அஸ்காபாத்: துர்க்மேனிஸ்தானில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய உள்ளரங்கு விளையாட்டுப் போட்டிகளில் 3,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 5-வது ஆசிய உள்ளரங்கு ஓட்டப் போட்டியில் இந்தியா வெல்லும் முதலாவது தங்கம் இது.
 5-வது ஆசிய உள்ளரங்கு போட்டிகள் துர்க்மேனிஸ்தான் தலைநகர்
அஷ்காபாத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 2 நாட்களாக 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் நடைபெற்றன.


இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். ஏற்கனவே பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருக்கிறார் லட்சுமணன்.

Related