இன்று(22.09.2017)மதுரையில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள்

(1)ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயிர்க்கோரிக்கையான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்தும் வரை ஜேக்டோ ஜியோ தொடர்ந்து சமரசமின்றிப் போராடும்.

(2)ஜேக்டோ ஜியோவின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 08.10.2017 அன்று போராட்ட விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும்.

(3)ஜேக்டோ ஜியோவின் வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நாளான 23.10.2017 வரை ஜேக்டோ ஜியோவின் இன்றைய நிலை தொடரும்

(4)உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஊதியக்குழு எப்போது அமல்படுத்தப்படும் என்ற தேதியை 13.10.2017ல் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்காவிட்டால் 15.10.2017 அன்று ஜேக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கையைவிவாதிப்பது


(5)23.10.2017 அடுத்தகட்ட வழக்கு விசாரணைக்குப் பின்பு 25.10.2017 அன்று ஜேக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பது.


Related