ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் வழங்கும் இலவச டாக்டைம்.!

ஜியோ தற்போது பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது, அதை
தொடர்ந்து இப்போது ஜியோ பீச்சர் போனை
கொண்டுவந்துள்ளது, வோடபோன் நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக தற்சமயம் இலவச டாக்டைம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு மக்கள் இதற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வோடபோன் மற்றும் ஐடெல் நிறுவனத்துடன் இணைந்து இந்து புதிய இலவச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஐடெல் பீச்சர்போன் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச டாக்டைம் வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் பொறுத்தவரை உலகம் முழுவதும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, அதன்பின்பு வோடபோன்
இன்டர்நெட் வேகம் பொறுத்தவரை குறிப்பிட்ட அளவு தான் கிடைக்கிறது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ஐடெல் பீச்சர் போன் வாங்குவோருக்கு இந்த இலவச சலுகை வழங்கப்படுகிறது, மேலும் பீச்சர்போன் வாங்குவோருக்கு இவை மிகப்பெரிய ஆபர் எனக் கூறப்படுகிறது, எனவே பல்வேறு மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவார்கன் என எதிர்பார்க்கப்படுகிறது

Related