ஜாக்டோ - ஜியோ போராட்டமும் இடைநிலை -ஆசிரியர் ஊதிய முரண்பாடும்

ஜாக்டோ - ஜியோ போராட்டமும் இடைநிலை

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஆசிரியர் ஊதிய முரண்பாடும்
➖➖➖➖➖➖➖➖➖➖

ஆசிரியர் சொந்தங்களே உங்களை வணங்கி மகிழ்கிறேன்

தயவுசெய்து என் கட்டுரையை முழுவதும் படியுங்கள் நீங்கள் சிந்திப்பீர்களோ சினம்கொள்வீர்களோ முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்

🛑 ஜாக்டோ ஜியோ போராட்டம் வெற்றியடையும் வரை போராடுவோம் சரி . கடந்த 70 ஆண்டுகால இயக்க வரலாற்றில் பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம்

🛑அந்த வெற்றியில் பல வலிகளும் வடுக்களும் உள்ளன அந்த போராட்டத்தில் பலர் மாரடைப்பால் மாண்டனர் சிலர் தீக்குளித்தனர் அப்பொழுதெல்லாம் யாருடைய தாலி அறுக்கப்பட்டது இடைநிலை ஆசிரியர்களின் மனைவிகள்தான் தாலியை இழந்தனர்


🛑 இயக்கத்தின் இதயம்தான் இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள்தான் இயக்கத்தின் நுரையீரல்கள் ஒவ்வொரு போராட்ட வெற்றிக்குப்பின்னும் அரசாணைகள் எழுதப்படுவது மையால் அல்ல இடை ஆசிரியர்களின் இரத்தத்தால்.


🛑தமிழ் மண்ணில் நடந்த அத்தனை போராட்ட வரலாறையும் நான் நன்கு படித்தவன் என்ற முறையிலும் போராளிகளின் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்ட பட்டவன் என்ற முறையிலும் ஒரு வரலாற்று பிழையை சுட்டிக் காட்டுகிறேன்

🛑கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் என்ற முழக்கம் முடங்கிப் போனது ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள 1 லட்சம் அழைப்புகள் வருகிறது அதில் CPS மட்டும் கோரிக்கையாக சுட்டப்படுகிறது .


🛑விண்ணதிர முழங்குகிறோம் ஆனால் அதில் இடை நிலை ஆசிரியர்களின் உரிமையை உள்ளடக்க மறந்துவிடுகிறோம் CPS என்ற ஒற்றை கோரிக்கையை மட்டுமே முன்னெடுக்கிறோம் இது கண்களை விற்று சித்திரம் வாங்குவது போன்றது

🛑 ஆம் கண்கள் என்பது இநி ஆசிரியரின் ஊதியம் அதற்கான விளக்கம் இதோ நாம் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு வந்துவிட்டோம் என வைத்துக்கொள்வோம்

🛑 ஓய்வூதியமானது கடைசி மாத ஊதியத்தில் 50% கணக்கிடப்படுவது எனில் 2.1.2006 அன்று 5200_2800 ஊதியத்தில் 28 வயதில் நியமிக்கப்படும் ஓர் இநி ஆசிரியர் 30 ஆண்டுகள் பணியாற்றி 3 ஊதிய குழுவை சந்தித்து ஓய்வு பெறும் பொழுது Basic pay 40000(தோரயமாக) பெறுவார் என வைத்துக் கொள்வோம்

🛑அவரது pension 40000_ல் 50% 20000 ஆனால் அவர் 2.1.2006 அன்று மத்திய அரசுக்கு இணையாக 9300_4200 என்ற ஊதிய விகிதத்தில் நியமனம் செய்யப்பட்டிருந்தால் அவரின் கடைசி மாத ஊதியம் 80000 (தோரயமாக)

🛑 இப்பொழுது அவரின் pension 80000 ல் 50% 40000 இத்துடன் அவரின் DA வையும் சேர்க்கவும் ஆக ஊதிய முரண்பாட்டை நீக்கி CPS ரத்து செய்தால் தான் நமக்கு ஓய்வூதியம் 2 மடங்கு கூடுதலாக கிடைக்கும் அவருக்கு நீதி கிடைக்கும் ஊதிய முரண்பாட்டை நீக்காமல் பழைய ஓய்வூதியம் பெறுவது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும்


🛑தற்பொழுது இநி ஆசிரியரின் இழப்பு மாதம் 4500 வருடம் 54000 எனில் 30 ஆண்டு பணிபுரிபவரின் இழப்பு 16 20 000 மேலும் 3 ஊதியகுழுவின் மாற்றம் ஆண்டு ஊதிய உயர்வு DA மாற்றம் Surrender தொகை பணி ஓய்வின் பொழுது கிடைக்கும் பணிக்கொடை ஓய்வின் பொழுது சேமித்த விடுப்புகளை ரொக்கமாக்குவது என கணக்கிட்டால் இழப்பு 1 கோடிக்கு மேல் வரும்


🛑 இப்பொழுது சொல்லுங்கள் CPS போல் அபாயகரமானது ஊதிய முரண்பாடு ம் தான் இன்று நம்முடன் அரசு ஊழியர்கள் BT PG இணைந்திருப்பது பலம்தான் ஆனால் அவர்களுக்கு 1 ரூபாய் கூட ஊதிய இழப்பு இல்லை ஆகையால் அவர்களின் ஒற்றை கோரிக்கை CPS மட்டும் தான்


🛑ஆனால் நமக்கு ஊதியம்+ CPS இரண்டும் முக்கியம் 10 லட்சம் பேர் கூடி சக்தியை ஒன்று திரட்டி போராடும் இந்த தருணத்தில் 9300_4200 வாங்காவிட்டால் பின் எப்பொழுது வாங்குவது?

🛑 உடன் சேர்ந்தவர்களுக்கு புரிய வைத்து ஊதியத்தை வாங்கித்தருவது நம் தலையாய கடமை இநி ஆசிரியர்களில் பலர் பதவி உயர்வு பெற்றதாலும் option கொடுத்து 4300 GP வாங்கியதாலும் இழப்பை உணர முடியவில்லையா .

🛑பாவம் இநி ஆசிரியர்கள் நம்மை நம்பி 10 ஆண்டுகள் போராடினார்கள் 5200_2800 அடிப்படையில் அவர்களுக்கு 8 வது ஊதியக்குழு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டால் அது அவர்களை கொலை செய்வதற்கு சமம்

🛑 காலம் கடந்து விட வில்லை இனியாவது அவர்களின் ஊதியத்திற்கும் முன்னுரிமை கொடுப்போம் நாளை அதற்காகவும் குரல் கொடுப்போம் 70 ஆண்டுகால போராட்ட வரலாறு இநி ஆசியர்களின் ரத்தத்தில் எழுதப்பட்டது அதைச் சொல்லி போராட்டத்திற்கு அழைக்கும் நாம் CPS மட்டும் முன்னிலைப் படுத்துவது தவறு.


🛑 இன்று தமிழகம் முழுக்க எதிரொலிப்பது CPS குரல் மட்டும் தான் இது வரலாற்றுப்பிழை அந்த உரத்த குரலில் இநி ஆசிரியரியர்களின் கோரிக்கை செத்துப் போய்விட்டது அவர்கள் 1988 க்கு முன்பு உள்ள படி சென்றுவிட்டார்கள் அவரவர் இயக்கத் தலைமையிடம் சொல்லுங்கள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் ஊதிய முரண்பாட்டை களைந்து 8 வது ஊதியக்குழு ஊதியத்தை நிர்ணயிக்க அரசை வலியுறுத்தச் சொல்லுங்கள்


🛑 நான் பட்டதாரி ஆசிரியர்தான் ஆனால் உண்மையான போராளி அவர்களின் வலியை உணர்ந்தவன் நாளைமுதல் CPS + மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இரண்டிற்கும் ஓங்கி குரல் கொடுப்போம் இவை இரண்டும் கிடைக்கும் வரை போராடுவோம் உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

அன்புடன்


உங்களில் ஒருவன் ..

Related