சத்துணவு சமைக்க 'பிரஷர் குக்கர்'

சத்துணவு மையங்களுக்கு, 'பிரஷர் குக்கர்' வாங்க, 4.80 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நடப்பாண்டு, 19 ஆயிரத்து, 230 சத்துணவு மையங்களுக்கு வழங்க, 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட, அலுமினியம் அல்லது, 'இண்டோலியம் பிரஷர் குக்கர்' வாங்க, அரசு முடிவு செய்துள்ளது.



 இதற்காக, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பிரஷர் குக்கர் வாங்க, சமூக நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க, செப்., 11ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related