பொறியியல் கல்வியில் மாற்றம் : அரியர்ஸ் இனி ‘ரீ அப்பியர்’ என அழைக்கப்படும்

பொறியியல் கல்வியில் இந்தாண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2017-18ம்
கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலை. நடத்தி முடித்துள்ளது. 560க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இந்தாண்டு சுமார் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது.
இதையொட்டி மாணவர், பெற்றோர், ஆசிரியர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் இந்திரா கெட்சி டேவிட் அறிமுகவுரையில் பேசியதாவது: இந்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் தெரிவு அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி 2ம் ஆண்டில் உங்களுக்கு விருப்பமான 2 பாடங்களை தேர்வு செய்து படிக்க முடியும். மேலும் கிரேடு முறையிலான மதிப்பெண் வழங்கப்படும். 50 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண் எடுத்திருந்தால் அரியர்ஸ் என்று இனி குறிப்பிடப்பட மாட்டாது. ‘ரீ அப்பியர்என்று அழைக்கப்படும். அந்தப் பாடத்திற்கான தேர்வை ஜூனியர் மாணவர்களுடன் எழுத வேண்டியிருக்கும்.

முதல் 7 நாள் பிரிட்ஜ் கோர்ஸ் எனப்படும் ஓரியண்டேசன் புரோகிராம் நடத்தப்படும். கல்லூரி நாட்களில் ஆய்வுக்கூட வகுப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாணவ - மாணவியும் என்சிசி, என்எஸ்எஸ், என்எஸ்ஓ, ஒய்ஆர்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் உறுப்பினராக சேர வேண்டும். இது மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்யப்படும். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை இன்டர்ஸ்ட்ரியல் விசிட்டும் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related