ஜெ. மரணம் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதேபோல ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லமான வேதா நிலையத்தினை நினைவிடமாக மாற்றவும் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்
Probe into Jayalalithaa death - CM Edapadi palanisamy

சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்துள்ளார்.
நீதிபதி யார் என்று பின்னர் அறிவிக்கப்படும். அவர் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை நன்கு பரிசீலித்து இதனை அறிவித்துள்ளோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.\

இந்த இரண்டு உத்தரவுகளுமே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விதித்த நிபந்தனைகள் ஆகும். இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொண்டுள்ளதால் இரு அணிகளும் இணைவது உறுதியாகியுள்ளது.

Related