தமிழகம் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொடும் - ஓபிஎஸ்,ஈபிஎஸ்க்கு மோடி வாழ்த்து

தமிழகத்தின் துணை முதல்வராக .பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். பன்னீர்செல்வத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனை
தொடர்ந்து தலைமை செயலகம் சென்ற .பன்னீர்செல்வம், அங்கு துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். கோப்புகளில் கையெழுத்திட்டு துணை முதலமைச்சர் பணியை பன்னீர்செல்வம் தொடங்கினார். தலைமை செயலகத்திற்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பாண்டியராஜனும் வருகை தந்தார். அவரும் தனது துறை ரீதியான பொறுப்புகளின் கோப்புகளில் கையொப்பமிட்டார். முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இருவரும் தத்தமது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்ட .பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து ஆதரவையும் அளிக்கும் என வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்

Related