3 மாதங்களுக்குள் தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

சென்னை: 3 மாதங்களுக்குள் தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


 
சென்னயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் பயிற்சிபெற சிடி வடிவில் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நீட் தேர்வில் விலக்கு கோரும் நிலையில் சிடி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Related