ஜாக்டோ- ஜியோ- 1 நாள் அடையாள வேளை நிறுத்தம் 22.08 2017

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

தமிழக ஆசிரியர் மன்ற
 பொதுச்செயலாளர்
*திரு.வே.இளங்கோ*
         அறிக்கை.
💥💥💥💥💥💥💥💥
நான் , நீ என உரைக்காமல்
     *நாம்*
என உரைக்கும்
போது தான்,
 உதடுகள் கூட ஒட்டும் என்ற
முத்தமிழறிஞனின்
இனமானக் கூற்றை
உண்மையாக்கும் வகையில் ,விருப்பு வெருப்புகளை மறந்து,
முழு வீச்சுடன், ஜாக்டோ-ஜியோ போராட்டக் களத்தில் *நாம்* என்ற நிலையில் களமாடிவரும்,

எனது உயிருக்கு இணையான
 உன்னத பொறுப்பாளர்களே,!

இயக்கத்தின் உயிர்த்துடிப்பான
தமிழக ஆசிரிய மன்ற
உறுப்பினர் சொந்தங்களே!

 ஜாக்டோ-ஜியோ போராட்டக் களத்தில்
மாநில அமைப்பின் வேண்டுகோள் ஏற்று செயல்பட்ட    
உங்கள் அனைவரின் பங்களிப்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !

 களச்சூழலுக்கு ஏற்றவாறு செயலாற்றுவதில்,
அனுபவமும்,திறமையும் திராவிட
பாரம்பரியத்தில் பெற்ற
நம்மவர்கள்,
அதனை இன்று, ஆசிரியர்  சமூகம் என்ற இன உணர்விற்காக , ஒருங்கிணைந்த போராட்டமே
வெற்றிக்கு வழி  வகுக்கும் என உணர்ந்துள்ள உரிமை மிட்பு களத்தில், இன்றளவிலும் கூட ஓரிரு இடங்களில் சுய விருப்பு வெருப்பு காட்டி ,சுயநல போதையில் உழன்று, வெற்றிக்கு வேட்டு வைக்க எத்தனிட்டு,
ஆசிரியர் துரோக செயல்கள்  மேற்கொண்டு வரும் சில கருப்பு ஆடுகள், எடுத்தாண்டு வரும் துரோக செயல்களை பொறுத்துக்கொண்டு அதனையும் முறியடித்து, பல பிரம்மிக்கத்தக்க செயல்பாடுகளை
ஜாக்டோ-ஜியோ என்ற கட்டமைப்பில், கட்டுக்கோப்புடன் களமாற்றி வரும் தமிழக ஆசிரியர் மன்ற உறவுகளே உமக்கு, எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பர்களே,
              ஜாக்டோ ஜியோ களத்தில் ஆசிரியர்கள் வாழ்வாதார
பிரச்சினைகளுக்காக இரண்டு கட்ட போராட்டம் முடித்து, ஆட்சியாளர்களை களங்கடித்திருக்கும் நிலையில் ,மூன்றாம் அஸ்திரத்தை , அதாவது ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை  ஜாக்டோ ஜியோ கையில் எடுத்துள்ளது.
 அரசு இயந்திரத்தை ஒருநாள் முழுதும் முடக்கி,
உறங்குவது போல் நடிக்கும் ஆட்சியாளர்களை கிரங்கடிக்கச் செய்யும் வண்ணம், நமது கோரிக்கைகளான CPS இரத்து செய்தல் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க, மன்ற மறவோர்கள்  அனைவரும் 22:08:17 அன்று ஒருநாள் பள்ளி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஜாக்டோ- ஜியோ முன்னெடுத்துள்ள 
அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
   நன்றி.!🙏🙏
 💥💥💥💥💥💥💥💥
அன்புடன்:-
       *வே. இளங்கோ.*
பொதுச்செயலாளர்,
தமிழக ஆசிரியர்
        மன்றம் .

Cell.;-9442873320.

Related