TAM-NEWS

Teaching Practice ல் குழப்பம்;

 தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் BEd படிப்பானது அஞ்சல் வழியில் நடத்தப்பட்டு வருகிறது.அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன், தஞ்சை தமிழ் போன்றவற்றில் தொடக்கப் பள்ளிகளில் விடுப்பின்றி கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அறிவிப்பு ஆணைகள் வெளியிடப்பட்டு  உள்ளன. ஆனால்,
விதிவிலக்காக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மட்டும் நடுநிலை / உயர்நிலைப் பள்ளியில் மட்டுமே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள நிர்பந்திக்கிறது. இதனால் TNOU -ல் BEd பயிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 800 பேர் அரைச் சம்பள விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாய சூழலில் உள்ளனர். G.0 77  படி TNOU அறிவிப்பு வெளியிடவில்லை.இது BEd பயிலும் ஆசிரியர்களில் பலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் அமைந்து  உள்ளது. எந்த பல்கலைக் கழகத்தின் அறிவிப்பு சரியானது என்பதில் கல்வியாளர்களிடம் குழப்பம் நீடித்து வருகிறது.

நன்றி-
sudalaimani111 <sudalaimani111@gmail.com>


Related