நீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரராவ் உறுதி

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நல்ல முடிவு எடுக்கும் என பாஜ தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறினார்
பாஜ தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் மதுரை விமானநிலையத்தில்
நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிமடுத்து இலங்கை சிறையில் இருந்த 77 தமிழக மீனவர்களையும், 42 மீன்பிடி படகுகளையும் மீட்டு  தந்துள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கை மீது மத்திய அரசு விரைந்து நல்ல முடிவு  எடுக்கும். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பாஜவிற்கு மாறி வருவது அந்த மாநிலம் சம்பந்தப்பட்ட உள்விவகாரம். அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க  விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related