அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

 பள்ளிகளில், தமிழ் பாடம் கட்டாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய, கல்வி
துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 தமிழகத்தில், பள்ளி கல்வி துறையில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக படிக்க வேண்டும் என, தமிழ் கற்கும் சட்டம், 2006ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2006 - 07ல், அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டது.


இதன்படி, ஒவ்வொரு ஆண்டாக அமல்படுத்தி, கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறுபான்மை பள்ளிகள், நீதிமன்றத்தை நாடின. இதுபோன்று எதிர்ப்பு எழாதபடி, நடப்பு கல்வியாண்டு தொடக்கம் முதலே, அனைத்து பள்ளிகளிலும், தமிழ் பாடம் நடத்துவதை உறுதி செய்து கொள்ள, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறுபான்மை மொழி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி, தமிழ் பாடம் நடத்த, அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Related