அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை


அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

சங்கத்தினருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான உயர்நீதிமன்ற கருத்தை எதிர்த்து ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ள போராட்டத்திற்கு நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆண்டில் பாதி நாட்கள் பணிக்கு வருவதில்லை என கூறிய அவர் அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களின் அங்கீகாரங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்


Related