அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை... சாம்சங் நிறுவனத்துடன் கைகோத்த எடப்பாடி அரசு!-- அஷ்வினி சிவலிங்கம்

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் பள்ளிக் கல்வித்
துறை திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை ஜூன் மாதம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HitechLabs) ஏற்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சாம்சங் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி 20 மேல்நிலை பள்ளிகள் மற்றும் 8 நடுநிலை பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related