பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு: செங்கோட்டையன் அறிவிப்பு.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

செங்கோட்டையன் அறிவித்துள் ளார்.சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் .பொன்முடி,
‘‘கடந்த 2012-ல் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதலில் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால்கூட போதும். ஆனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.

இதனை வலியுறுத்தி சென்னையில் இன்று (ஜூலை 12) போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்என்றார்.அவருக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஊதிய உயர்வு உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க குழு அமைத்து தீர்வு காணப்படும்’’ என்றார்.

Related