7-வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த கோரிக்கை

7-வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த பாவலர் கோரிக்கை


7-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் . மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு 3 மாதத்தில் அறிக்கை சமர்பிக்கும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால், இதுவரை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து 4 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. குழுத் தலைவராக இருந்த சாந்தாஷீலா நாயரும் பதவி விலகிவிட்டார். இதற்கிடையில் அந்த அறிக்கை என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை.
இந்நிலையில், 7-ஆவது ஊதியக்குழு அறிக்கை 4 மாதத்தில் சமர்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தற்போது மேலும் 4 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரியவில்லை. எனவே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் 64 சங்கங்கள் இணைந்து ஜேக்டோ-ஜியோ என்ற அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஜூலை 18-ஆம் தேதி 7-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தும் முன் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கு பிறகும் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும். அப்போதும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் மீனாட்சிசுந்தரம்.
No automatic alt text available.

Related