TAM-NEWS

+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங்க ஏற்பாடு: கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்

 கோபியில் கல்விதுறை அமைச்சர் கே..செங் கோட்டையன் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 

  பிளஸ்-2 மாணவர்களுக்கு பரிட்சை எழுதும்போது பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு மாதிரி வினா-விடை வழங்கப்பட உள்ளது.

இதேபோல் பிளஸ்-1 வகுப்பு பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும்.

ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் நம்பியூரில் அரசு கலை கல்லூரி 4-ம்தேதி தொடங்கப்பட உள்ளது. அதேநாளில் டி.என்.பாளையத்தில் .டி.. அரசு சார்பில் தொடங்கப்பட உள்ளது.

மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.

மேலும் 450 மையங்களில் பல்வேறு பொது தேர்வுகளை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் 3 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் பல்வேறு நிலைகளில் அதற்கேற்ப திட்டங்கள் அறிவிக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Related