அடுத்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம், மருத்துவ படிப்பில்நீட்தலையீடு வந்ததுபோல அடுத்த ஆண்டு என்ஜினீயரிங்
படிப்புக்கும்நீட்தலையீடு இருக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:- ‘நீட்தேர்வு தொடர்பான முழு விளக்கத்தையும் அமைச்சர்கள் ஏற்கனவே விரிவாக தெரிவித்துவிட்டனர். காலப்போக்குக்கு தகுந்தபடி அனைத்தும் மாறிவருகிறது.
2018-19-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புக்குநீட்தேர்வு உண்டு என்று கூறியிருக்கிறார்கள். அது வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம். தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது. முதுநிலை என்ஜினீயரிங் படிப்புக்குகேட்தேர்வு நடக்கும் என்று கூறியிருக்கிறார்கள். நாம்டான்செட்தேர்வு மூலமே அதனை கையாண்டு வருகிறோம். அதுவே போதுமானது என்று கூறியிருக்கிறோம். எல்லா மாநிலங்களும்நீட்தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கும்போது, தமிழகம் ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதனை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.
எனவே அடுத்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்


Related